“முத்தரசனின் இரண்டு கண்களுக்கு மட்டும் இரண்டு பார்வை”-ஓ.எஸ்.மணியன் விமர்சனம்

“முத்தரசனின் இரண்டு கண்களுக்கு மட்டும் இரண்டு பார்வை”-ஓ.எஸ்.மணியன் விமர்சனம்
“முத்தரசனின் இரண்டு கண்களுக்கு மட்டும் இரண்டு பார்வை”-ஓ.எஸ்.மணியன் விமர்சனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனின் இரு கண்களுக்கு மட்டும் இரு பார்வை உள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் செய்துள்ளார்.


நாகையில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊர்க்காவல்படை மண்டல அலுவலத்தை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மனுதர்ம சர்ச்சை பேச்சு விவகாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நற்பெயரை தரும். இது போன்ற கருத்துகள் நல்லவர்களுக்கு தேவையில்லாத ஒன்று என்றார்.


தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இரண்டு கண் உள்ளவர்களுக்கு பார்வை ஒன்றாக இருக்கும். ஆனால் முத்தரசனின் இரு கண்களுக்கு மட்டும் இரண்டு பார்வைகள் உள்ளதாக அவர் விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com