''விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்'' - அமைச்சர் செங்கோட்டையன்

''விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்'' - அமைச்சர் செங்கோட்டையன்
''விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு  வரலாம்'' - அமைச்சர் செங்கோட்டையன்

 திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் துவக்க பள்ளியை தரம் உயர்த்தி நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்ட நிலையில், அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கடன் தள்ளுபடி போன்ற விஷயங்கள் விவசாயிகள் நலன் கருதி இது போன்ற அறிவிப்பு என்பது தேர்தல் நேரங்களில் மட்டும் தான் அறிவிப்பது வழக்கம், ஆனால் சட்டமன்றத்திலேயே முதல்வர் அறிவித்துள்ளார் என்று கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு என்பது இந்தியாவே வியந்த ஒன்றாகும் என்றவர், வறட்சி நிலங்களில் குடிமராத்து பணிகள் , அத்திக்கடவு அவிநாசி போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது குறித்த கேள்விக்கு, பள்ளிகள் நடைபெற வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வி சிறக்க வேண்டும் என்றும், விருப்பப்பட்ட மாணவர்கள் வரலாம் என்று கூறியுள்ளதால் அச்சம் தேவையில்லை என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com