\
கொடைக்கானல்: 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி

கொடைக்கானல்: 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி

கொடைக்கானல்: 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி
Published on

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே, கொடைக்கானலில் உள்ள படகு குழாம் மற்றும் பூங்காங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிள் கொடைக்கானலுக்கு வந்து செல்வதை தொடர்ந்து, அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஏரியில் படகு சவாரி செய்வதற்கும், பூங்காக்களில் செல்வதற்கு இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு குழாம் மற்றும் தோட்டக்கலை பூங்கா நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com