மெரினாவில் 900 கடைகளுக்கு மட்டுமே அனுமதி - மாநகராட்சி தகவல்

மெரினாவில் 900 கடைகளுக்கு மட்டுமே அனுமதி - மாநகராட்சி தகவல்
மெரினாவில் 900 கடைகளுக்கு மட்டுமே அனுமதி - மாநகராட்சி தகவல்

மெரினா கடற்கரையில் 900 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எ‌‌ன சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகள், மீன் வியாபாரிகளை‌ ஒழுங்குப்படுத்துவது தொடர்பான வழக்குகள் உயர்நீதி‌மன்றத்தில் விசாரணைக்கு ‌வந்தது‌. மெரினா கடற்கரையில் தற்போது ஆயிரத்து 962 கடைகள் உள்ளதாகவும், அவற்றில் 900 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி, 27 புள்ளி 4 கோடி ரூபாயில் கடைகள் அமைத்து கொடுக்க உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இதேபோல், கலங்கரை விளக்கம் அருகே 66 லட்சம் ரூபாய் செலவில் 300 மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், உணவு விற்பனைக்கான தரச்சான்று பெறாத கடைகளை மெரினாவில் அனுமதிக்க கூடாது எனக் கூறினர். மெரினா கடற்கரையை அழகுபடுத்த மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஜனவரி 8ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com