ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு முகநூல்

அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு... விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு முன்பதிவு!

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி அவனியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு, 16ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகிய 3 போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் முன் பதிவு தொடங்கியது மாலை 5 மணிக்கு madurai. nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்தனர். காளையின் மருத்துவச் சான்றிதழ், காளையின் படம், உரிமையாளர் மற்றும் உதவியாளருடன் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் ஜல்லிக்கட்டு காளையை துன்புறுத்தாமல் விதிகளுக்கு உட்பட்டு போட்டியில் கலந்துகொள்வோம் என்ற உறுதிமொழியிலும் ஒப்பதல் அளித்த பின்னரே முன்பதிவு செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டு
”மக்களின் கோபத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள்” - ஆளுநரை விமர்ச்சித்த திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்

இதேபோன்று மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவில் மாடுபிடி வீரரின் கைபேசி எண் , ஆதார் எண், பெயர், வயது, முகவரி, உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்த பின்னர் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மாலை 5 மணி வரைபதிவு செய்யலாம். ஆன்லைன் மூலமாக பதிவு தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com