தமிழகத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்வு
தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாயை வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. திருச்சி வெங்காய மண்டியிலும், மதுரை காய்கறி சந்தையிலும் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 110 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய விளைச்சல் சிறப்பாக உள்ளதாலும் அங்கு விளையும் வெங்காயம் அதே பகுதிகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதால் கோவை சந்தையில் வெங்காயத்தின் விலை மற்ற நகரங்களைவிட சற்று குறைவாக உள்ளது. அங்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் 66 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 76 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, வெங்காய விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
வெளிநாடுகளில் இருந்து ஒன்று புள்ளி இரண்டு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை ஏற்கெனவே கடந்த புதன் அன்று ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.