ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டம்! எங்கே தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்ட ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது ராமநாதபுரம் மாவட்டம் வரை நீள்கிறது. மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் அடிப்படையில் மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலம் மூலம் ஓ.என்.ஜி. சி. நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.

ONGC
ONGC புதிய தலைமுறை

தற்போது அப்பகுதியில் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. கிணறு ஒன்றுக்கு 33 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மொத்தமாக 20 சோதனை கிணறுகளை 675 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ளது.

சோதனை கிணறுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி தாலுகா மற்றும் சிவகங்கையின் தேவகோட்டை தாலுகாவில் அமைக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி கோரியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com