தமிழ்நாடு
இடி தாக்கியதில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் பலி
இடி தாக்கியதில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் பலி
தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்கிறது. இதனால், இடி, மின்னல் தாக்கில் சிலர் உயிரிழந்துள்ள சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நாகை மாவட்டத்திலும் இடி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ராஜபாளையம் அருகே ஒத்தப்பட்டியில் செட்டி குளம் கண்மாயில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது இடி விழுந்ததில் முனியராஜ் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவர் உடன் விளையாடிய கருப்பசாமி என்பவர் காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.