காய்ச்சலால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
Published on

நாமக்கலில் விவசாய கூலி தொழிலாளியின் ஒன்றரை வயது குழந்தை காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி செல்வம். இவரின் ஒன்றரை வயது குழந்தை தனுஷூக்கு திடீரென நேற்று காலை காய்ச்‌சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் காய்ச்சல் தீவிரமடைந்ததால், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தான். காய்ச்சல் காரணமாக ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com