தண்ணீர் தேடிவந்த கரடி பரிதாப பலி : அதிகரிக்கும் வனவிலங்குகளின் உயிரிழப்புகள்..

தண்ணீர் தேடிவந்த கரடி பரிதாப பலி : அதிகரிக்கும் வனவிலங்குகளின் உயிரிழப்புகள்..
தண்ணீர் தேடிவந்த கரடி பரிதாப பலி : அதிகரிக்கும் வனவிலங்குகளின் உயிரிழப்புகள்..

ஆண்டிப்பட்டியில் தண்ணீர் தேடி வந்த கரடி ஒன்று வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

தமிழகத்தில் வனவிலங்கள் உயிரிழக்கும் சம்பவம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதிக்குள் இருந்து தண்ணீர் தேடி வரும் மான்கள், யானைகள் மற்றும் கரடி உள்ளிட்டவை பெரும்பாலும் இறக்கின்றன. நாய்கள் கடிப்பதால் அதிகப்படியான மான்கள் இறக்கின்றன. மனிதர்களால் கரடிகள் மற்றும் யானைகள் இறக்கின்றன.

அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனவாய் மலைப்பகுதியில் இருந்து, அடிவாரத்தில் உள்ள விவசாயப் பகுதி ஒரு வயது கரடி ஒன்று தண்ணீர் தேடி வந்தது. அது தேனி-மதுரை நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த வாகனம் ஒன்று கரடியை அடித்து தூக்கியது. இதில் படுகாயமடைந்த கரடி பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com