திருப்பத்தூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்த ஒரு வயது பெண்குழந்தை உயிரிழப்பு- போலீஸ் விசாரணை

திருப்பத்தூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்த ஒரு வயது பெண்குழந்தை உயிரிழப்பு- போலீஸ் விசாரணை

திருப்பத்தூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்த ஒரு வயது பெண்குழந்தை உயிரிழப்பு- போலீஸ் விசாரணை
Published on

ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் ராஜ்குமார்- பிரியங்கா ஆகிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ராஜ்குமார் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் ராஜ்குமாரின் மனைவி பிரியங்கா வேலை பார்த்துகொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது இந்த தம்பதியரின் ஒருவயது பெண் குழந்தை நேத்ரா, வீட்டின் பின்பக்கம் விளையாடிகொண்டிருந்துள்ளார். ஆனால் அந்த குழந்தை திடீரென அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உள்ளது.

இதை அறிந்த பிரியங்கா மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com