\
மின்சாரம் தாக்கியதில் 1 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

மின்சாரம் தாக்கியதில் 1 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

மின்சாரம் தாக்கியதில் 1 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் சேலையூரில் உயர் மின்னழுத்த கம்பியில் கை பட்டதால், மின்சாரம் தாக்கி கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சேலையூர் நியூ பாலாஜி நகரை சேர்ந்த சங்கர், ராணி தம்பதியரின் குழந்தை கிஷோர். குழந்தைக்கு 1 வயது ஆகிறது. இந்நிலையில் நேற்று மாடியில் நின்று கொண்டிருந்த கிஷோரின் கை, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் உரசியிருக்கிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் குழந்தை கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தான். இதனிடையே குழந்தையை காப்பாற்ற முயன்ற இருவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com