ஒரே பயணச்சீட்டு
ஒரே பயணச்சீட்டுபுதிய தலைமுறை

சென்னையில் ஒரே பயணச்சீட்டு நடைமுறை - எப்போது அமலுக்கு வரும்?

சென்னையில் ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் திட்டம் டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என, போக்குவரத்து குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published on

செல்போன் செயலி மூலம் ஒரே பயணச்சீட்டை பெற்று மாநகரப்பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.

செயலியை உருவாக்குவதற்கான டெண்டர் இம்மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் கோரப்பட உள்ளதாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே பயணச்சீட்டு
இது இல்லாட்டி pet வச்சிக்க முடியாது... சென்னை மாநகராட்சி எடுத்த முக்கிய முடிவு

முதற்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அடுத்தாண்டு மார்ச் மாதம் புறநகர் ரயில்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக ஓலா, உபர், ஷேர் ஆட்டோக்களையும் இத்திட்டத்தில் இணைக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை போக்குவரத்து குழும வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com