நெல்லை அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. தடுத்த சகோதரனுக்கும் ஆபத்து..!

நெல்லை அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. தடுத்த சகோதரனுக்கும் ஆபத்து..!

நெல்லை அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. தடுத்த சகோதரனுக்கும் ஆபத்து..!
Published on

ஏர்வாடி அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற பெண்ணின் அண்ணனுக்கும் வெட்டு விழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரி படிப்பை முடித்து விட்டு மேல் படிப்புக்காக அடிக்கடி திருநெல்வேலிக்கு சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் சுதாவை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

(படத்தில் இருப்பவர்- இசக்கிமுத்து)

1 வருடத்திற்கு முன்பு இசக்கிமுத்து, சுதாவிடம் தனது காதலை சொல்லியுள்ளார். சுதா அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து கையில் இருந்த பிளேடால் சுதாவின் முகத்தில் கிழித்து விட்டார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பிறகு இசக்கிமுத்து வேலைக்காக சென்னை சென்றுவிட்டார். இருந்தாலும் அடிக்கடி செல்போனில் சுதாவிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு இசக்கிமுத்து வந்துள்ளார். அப்போதும் செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வேறு ஒரு செல்போனில் இருந்து சுதாவை தொடர்பு கொண்டு தனது காதலை கூறியதாக கூறப்படுகிறது. இதனையும் சுதா ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து இன்று காலை வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சுதாவின் கழுத்து, கைகளில் அரிவாளால் வெட்டி உள்ளார். சுதாவின் சத்தம் கேட்டு ஓடி வந்த சுதாவின் அண்ணன் இசக்கியையும், இசக்கிமுத்து வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வர இசக்கிமுத்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். உறவினர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com