\
மேலும் ஒரு காவலருக்கு கொரோனா : சென்னையில் இன்று மட்டும் 5 காவலர்கள் பாதிப்பு

மேலும் ஒரு காவலருக்கு கொரோனா : சென்னையில் இன்று மட்டும் 5 காவலர்கள் பாதிப்பு

மேலும் ஒரு காவலருக்கு கொரோனா : சென்னையில் இன்று மட்டும் 5 காவலர்கள் பாதிப்பு
Published on

சென்னை மவுண்ட் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் அதிவேகமாக உயர்ந்து வருகின்றது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று மட்டும் 5 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மவுண்ட் ஆயுதப்படை சேர்ந்த காவலர் ஒருவர், கட்டுப்படுத்தபட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்ததால் அவருக்கு கொரோனா பரவியதாக தெரிகிறது. இதுதவிர 2 உதவி ஆய்வாளர், 2 ஆயுதப்படை காவலர் என மொத்தம் 5 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கோட்டூர்புரத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த 48 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com