புதுக்கோட்டை| கும்பம் ஏற்றும்போது தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு - 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை அருகே தேரில் ஏற்றும்போது, கும்பம் சரிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 6 பேர் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கவிழ்ந்த தேர்
கவிழ்ந்த தேர்pt web

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒருபகுதியாக தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அதில், தேரின் மீது கும்பம் ஏற்றும் பணி செய்துள்ளனர். இதன்போது, கும்பம் திடீரென சரிந்து விழுந்தது. கும்பத்திற்கு கீழே சிக்கி காயமடைந்த 6 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால், காயமடைந்த மகாலிங்கம் என்பவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கீரமங்கலம் கோபு, கணபதி உள்ளிட்ட 6 பேர் பேராவூரணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தேரும் அதற்கு கீழ் இருந்த சக்கரமும் சரியாக இணைக்கப்படாமல் இருந்ததே கும்பம் சாய்ந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com