\
பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: திருநங்கைகள் தள்ளிவிட்டத்தில் ஒருவர் பலி

பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: திருநங்கைகள் தள்ளிவிட்டத்தில் ஒருவர் பலி

பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: திருநங்கைகள் தள்ளிவிட்டத்தில் ஒருவர் பலி
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பணம் தர மறுத்ததால் ரயிலில் இருந்து திருநங்கைகள் தள்ளிவிட்டத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை முதல் ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு பேரிடம் திருநங்கைகள் சிலர் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் திருநங்கைகளுக்கு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.  பணம் தர மறுத்ததால் இளைஞர்களை ரயிலில் இருந்து திருநங்கைகள் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ரயிலில் இருந்து கீழே விழுந்த சத்திய நாராயணன் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த தாரம் வீரபாபு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தப்பியோடிய திருநங்கைகளை ரயில்வே காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com