\
விபத்தில் ஒருவர் பலி : நிற்காமல் சென்ற ஓட்டுநரை விரட்டிச்சென்ற காவலர்

விபத்தில் ஒருவர் பலி : நிற்காமல் சென்ற ஓட்டுநரை விரட்டிச்சென்ற காவலர்

விபத்தில் ஒருவர் பலி : நிற்காமல் சென்ற ஓட்டுநரை விரட்டிச்சென்ற காவலர்
Published on

சென்னை அசோக் பில்லர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள சாலையை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர் மீது மோதியது. இதில் தலையில் பலமாக அடிபட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரை மோதிய கல்லூரி பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். அங்கே ரோந்து பணியில் இருந்து காவலர் ஒருவர் அப்பேருந்தை விரட்டிச் சென்றுள்ளார். 

விபத்துப்பகுதியில் கூடிய மக்கள் சம்பவம் தொடர்பாக 108 அவசர ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனே ஆம்புலன்ஸ் வந்தது. சிறிது நேரத்தில் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றினர். மேலும், அவர் யார் என விசாரணை செய்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com