தமிழ்நாடு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாட்டில் விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாட்டில் விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாட்டின் போது நீட்டிக் கொண்டிருந்த மூங்கிலில் இடித்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக சாலையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் வெளியே நீட்டியபடி இருந்த மூங்கில் இடித்து இளைஞர் உயிரிழந்துள்ளார். அவ்வழியே இருசக்கர வானகத்தில் வந்த ரங்கசாமி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரகு எனும் இளைஞர் மூங்கிலில் இடித்து, தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் வசித்து வரும் ரகு திருமணத்திற்கு பெண் பார்க்க சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.