\
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை
Published on

சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர், வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர், வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கொரோனா காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே யாருக்கும் தெரியாத வகையில், அவர் வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை வளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com