குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தரிகோலால் குத்திக்கொலை

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தரிகோலால் குத்திக்கொலை

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தரிகோலால் குத்திக்கொலை
Published on

(கொலை செய்தவர்)

மாங்காட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபர் கத்தரிகோலால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய்குமார்(19). இவரது உறவினர் சுனில் கோண்ட்(21) உள்ளிட்ட பலர் மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி வேலை செய்து வந்தனர். நேற்று இரவு அனைவரும் குடித்து கொண்டிருந்தபோது அஜய்குமாருக்கும், சுனில் கோண்ட்விற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சுனில் கோண்ட், அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அஜய்குமாரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அஜய் குமாரின் கழுத்து பகுதியில் இருந்து ரத்தம் அதிகளவில் வடிந்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அஜய்குமாரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜய்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சுனில் கோண்ட்டை மாங்காடு போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அஜய்குமாரின் அக்காவை சுனில் கோண்ட்விற்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சுனில் கோண்ட்விற்கு குடிப்பழக்கம் இருப்பதால் குடிகாரனுக்கு தனது அக்காவை கட்டி வைக்கக் கூடாது என அஜய்குமார் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுனில் கோண்ட், கத்தரிக்கோலால் அஜய்குமாரை குத்திக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக  போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com