\
கொரோனா பயத்தால் ஒருவர் உயிரிழப்பு : விருதுநகரில் நிகழ்ந்த சோகம்..!

கொரோனா பயத்தால் ஒருவர் உயிரிழப்பு : விருதுநகரில் நிகழ்ந்த சோகம்..!

கொரோனா பயத்தால் ஒருவர் உயிரிழப்பு : விருதுநகரில் நிகழ்ந்த சோகம்..!
Published on

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம்பணணை சேர்ந்தவர் முத்துராம். 30 வயதே நிரம்பிய இவர், இரண்டு நாட்களாக தொடர் காய்ச்சலில் இருந்தார். இதனால் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், தனக்கும் கொரோனா வந்திருக்குமோ என அவர் அஞ்சிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று அவர் பயத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதற்கிடையே தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் வெளியிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com