\
நெல்லை அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை 

நெல்லை அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை 

நெல்லை அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை 
Published on

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ரயில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே கேட்டுக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விசாரணையில் இறந்தவர் வள்ளியூர் அருகே உள்ள குமார புதுக்குடியிருப்பை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. ரயில்வே போலீசார் இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தா என விசாரித்து வருகின்றனர். இதனால் நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய ரயில் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் சென்னையிலிருந்து குருவாயூர் வரை செல்லும் ரயில் நாங்குநேரி இரயில்நிலையத்திலும், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும்  ஜாம் நகர் திருநெல்வேலி விரைவு ரயில் வள்ளியூர் இரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com