\
ஓடும் ரயிலில் திமுக கொறடாவிடம் திருடிய நபர் கைது

ஓடும் ரயிலில் திமுக கொறடாவிடம் திருடிய நபர் கைது

ஓடும் ரயிலில் திமுக கொறடாவிடம் திருடிய நபர் கைது
Published on: 

எழும்பூர் பாண்டியன் ரயிலில் திமுக கொறடா சக்கரபாணியிடம் திருடிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திமுக கொறடாவாக இருப்பவர் சக்கரபாணி. இவர் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.

அப்போது இரவு நேரம் என்பதால் நன்றாக தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்க்கும் போதுதான் எடுத்து வந்த பேக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியுற்றார். அதன்மூலம் பேக்கில் இருந்த பணம், நகை, செல்போனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் பேக்கில் 2 சவரன் மோதிரமும், ஒரு லட்சம் ரூபாயும், செல்போனும் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தை சேர்ந்த கோபால் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏசி ரயில் பெட்டிகளில் ஏற்கனவே கோபால் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.