5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..!

5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..!

5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..!
Published on

பெட்ரோல் டீசல் கடுமையான விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கபடும் நிலையில் 5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் ஒரு லிட்டரை இலவசமாகப் பெறுவதற்கான செயலி கிருஷ்ணகிரியில் அறிமுகம் செய்யப்பட்டது. 

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பெற்று வருகின்றனர். பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி நாடு தழுவிய முழு வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர் பயன்பெறும் வகையிலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கபடுத்தும் வகையிலும் எச்.பி.எண்ணெய் நிறுவனம் புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலியை செல்போனில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால், அந்த வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் விலைக்கான பணம் செயலிக்கு அனுப்பப்படும். அந்த தொகை மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை மறுபடியும் பெறலாம். இந்த சேவை இரண்டு மாதங்களுக்கு மட்டும் செயல்படுத்தப்படும் எனவும் எண்ணெய் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள எச்.பி.ஜதர் பெட்ரோல் பங்க்கில் புதிய செயலி அறிமுக விழா பெட்ரோல் பங்க் உரிமையாளர் அமீன் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் கலந்துகொண்டு புதிய செயலியை அறிமுகம் செய்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான வாடிக்கையாளர் புதிய செயலியை பதிவேற்றம் செய்தனர். பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல்கள் : பழனிவேல், செய்தியாளர்-கிருஷ்ணகிரி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com