\
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷம் - பெரும் பரபரப்பு

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷம் - பெரும் பரபரப்பு

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷம் - பெரும் பரபரப்பு
Published on

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வரும் 23-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்களில் சிலர் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பினர் ஓ. பன்னீர் செல்வம் தான் கட்சி தலைமை பதவிக்கு வர வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் எழுந்தது. இதையடுத்து, அதிமுக கட்சி அலுவலக நிர்வாகிகள் நேரடியாக வந்து சமரசத்திற்கு ஈடுபட்டு கோஷம் எழுப்பியவர்களை சமாதானப்படுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com