முத்துலட்சுமி
முத்துலட்சுமிpt desk

திருச்சி: மின்னல் தாக்கியதில் சாலையில் நடந்துச் சென்ற பெண் உயிரிழப்பு

முசிறியில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது மின்னல் தாக்கியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Published on

செய்தியாளர்: சந்திரன்

திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்கு உட்பட்ட சாலியர் தெருவைச் சேர்ந்தவர், கூலித் தொழிலாளி நாகராஜன். இவரது மனைவி முத்துலட்சுமி (42). விவசாய கூலி வேலை செய்து வரும் இவர், ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்கள், இந்நிலையில், இன்று முத்துலட்சுமி வீட்டின் அருகேயுள்ள காவிரி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.

Death
Deathpt desk

அப்போது இடி, மின்னல் தாக்கி முத்துலட்சுமி கழுத்தில் லேசான காயத்துடன் கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் முத்துலட்சுமியை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முத்துலட்சுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

முத்துலட்சுமி
250 கி.மீ வேகத்தில் வீசிய காற்று.. 1966 ஆம் ஆண்டுக்கு பிறகு.. தைவானை தாக்கிய மிகப்பெரிய புயல்!

தகவல் அறிந்து அங்கு வந்த முசிறி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com