\
பள்ளி சுற்றுச்சுவர் அருகே பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் சிசு மீட்பு

பள்ளி சுற்றுச்சுவர் அருகே பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் சிசு மீட்பு

பள்ளி சுற்றுச்சுவர் அருகே பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் சிசு மீட்பு
Published on

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் அருகே பிறந்து ஒரு மணி நேரமான பெண் சிசு மீட்கப்பட்டுள்ளது.

வேலூர் காட்பாடி அடுத்த சேர்காடு அரசு பள்ளி சுற்றுச்சுவர் அருகே பிறந்து ஒரு மணி நேரமே ஆன நிலையில், பெண் சிசு ஒன்று அழுத நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அப்பகுதி வட்டாட்சியர் அலுவலகருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த திருவலம்  காவல் துறையினர் குழந்தையை மீட்டு, அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து காவல் அதிகாரிகள் கூறும் போது “ ஆட்சியரின் ஒப்புதலோடு சமூக நலத்துறை வழகாட்டுதலின் படி திருப்பத்தூரில் உள்ள தனியார் காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com