போலீஸ் துரத்தும்போது கடலில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு

போலீஸ் துரத்தும்போது கடலில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு

போலீஸ் துரத்தும்போது கடலில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு
Published on

சென்னை காசிமேட்டில் காவல்துறையினர் துரத்தும் போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை காசிமேட்டில் விசைப்படகு கட்டும் இடத்தில் நேற்றிரவு மீனவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து ‌அங்கு காவல்துறையினர் வந்தபோது மீனவர்கள் தப்பி ஓடியிருக்கின்றனர். அப்போது மீனவர்களி‌ல் இருவர் படகு கட்டும் இடத்தில் தவறி விழுந்திருக்கின்றனர். அதில், ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், தமிழரசு என்ற மீனவரின் உடலை, மீனவர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் இரவிலிருந்தே தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த மீனவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே, மீனவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்‌கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ஏராளமான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காசிமேடு முதல் தண்டையார்பேட்டை வரையிலான பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com