குடும்பப் பிரச்னையால் 2 மகள்களுடன் விஷம் குடித்த தாய் - ஒரு மகள் பரிதாப உயிரிழப்பு

குடும்பப் பிரச்னையால் 2 மகள்களுடன் விஷம் குடித்த தாய் - ஒரு மகள் பரிதாப உயிரிழப்பு

குடும்பப் பிரச்னையால் 2 மகள்களுடன் விஷம் குடித்த தாய் - ஒரு மகள் பரிதாப உயிரிழப்பு
Published on

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமார். அவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பிளஸ் டூ படிக்கும் மகள் மகாலட்சுமி மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் கோமதி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

குமாருக்கும் அவரது மனைவி கவிதாவுக்கும் குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாட்களாக மனமுடைந்திருந்தார் கவிதா. பல நாள் பொறுத்திருந்த அவர், நேற்று இரவு வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தானும் குடித்துவிட்டு பிறகு இரு பெண் பிள்ளைகளுக்கும் கொடுத்தார். இரவு என்பதால் யாருக்கும் தெரியாமல் படுத்துவிட்டனர்.

வழக்கம்போல் காலையில் எழுந்து வீட்டு வேலைகளைப் பார்க்காததால் அதிர்ச்சியடைந்த குமார், வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது மனைவியும் இரு மகள்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்துள்ளனர்.

பின்னர், அவர்களை புதுவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி பிளஸ் டூ படிக்கும் மாணவி மகாலட்சுமி இறந்துவிட்டார். 

மேலும் அவரது தாய் கவிதா மற்றும் தங்கை கோமதி ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுபற்றி மரக்காணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com