தேக்கடி ஏரிக்கரையில் உலவிய ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு..!

தேக்கடி ஏரிக்கரையில் உலவிய ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு..!

தேக்கடி ஏரிக்கரையில் உலவிய ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு..!
Published on

தேக்கடி ஏரிக்கரையில் படகுத்துறை அருகே உலவிய ஒற்றைக் காட்டு யானையால் சுற்றுலா பயணிகள் அச்சம் கலந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஒற்றைக் காட்டு யானை ஆபத்தானது என்பதால், வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அப்பகுதியில் இருந்து விரைந்து வெளியேற்றினர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக தேக்கடி உள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரிக்கரையில் தண்ணீர் குடிக்கவும் மேய்ச்சலுக்காகவும் வரும் வன விவங்குகளை காண்பதற்காகவே சுற்றுலா பயணிகள் தேக்கடிக்கு அதிகளவில் வருகின்றனர்.

இந்நிலையில் தேக்கடி ஏரிக்கரையில் ஒற்றை யானை ஒன்று உலவியது. நெடுநேரமாக அப்பகுதியில் உலவிய ஒற்றைக் காட்டு யானையை விரட்டும் முயற்சியில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினர் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் படகுச்சவாரி முடித்து திரும்பிய சுற்றுலா பயணிகள் காட்டு யானையை கண்டு உற்சாகமடைந்தனர். ஆனால் அது ஒற்றைக்காட்டு யானை என்பதாலும், அது எந்நேரமும் ஆபத்து ஏற்படுத்தும் என்பதாலும், அங்கு கூடிய வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை புகைப்படம் கூட எடுக்க அனுமதிக்காமல் வேகமாக வெளியேற்றினர். பின், பல மணி நேர போராட்டத்திற்கு பின் ஒற்றைக் காட்டு யானை வனத்திற்குள் சென்றது.

இதனிடையே இதுபோன்ற ஒற்றைக் காட்டு யானைகளை கண்டால் சுற்றுலா பயணிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருப்பதோடு, வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com