சென்னை கொருக்குப்பேட்டைபுதிய தலைமுறை
தமிழ்நாடு
சென்னை | பழைய கட்டடம் இடிக்கும் போது விபத்து... ஒருவர் பலி; இடிபாடுகளில் சிக்கிய மேலும் இருவர்!
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில், பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது, தளம் இடிந்து விழுந்ததில், கூலி தொழிலாளி ஒருவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மீனம்பாள் நகர் 2ஆவது தெருவில் தனிநபருக்கு சொந்தமான பாழடைந்த கட்டடத்தை இடித்து, அங்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு கூலி தொழிலாளிகள் அந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டை விபத்து
அப்போது, பாழடைந்த தளம் இடிந்து விழுந்ததில், அந்த இடிபாடுகளில் தொழிலாளர்கள் உட்பட 3 பேர் சிக்கிக்கொண்டனர். பின் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
எனினும், இதில் சிக்கி 55 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள இரண்டு பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.