ஜல்லிக்கட்டில் சோக நிகழ்வு: காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டில் சோக நிகழ்வு: காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டில் சோக நிகழ்வு: காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு
Published on

பிரசித்தி பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறப்பாக மாடு பிடித்த மூன்று வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உற்சாகத்துடன் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டில், துயர நிகழ்வாக ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த இளைஞர் ஒருவர் காளை குத்தியதில் பரிமாபமாக உயிரிழந்தார்.

விண்ணதிர வைக்கும் முழக்கங்கள்... வாடிவாசலை நோக்கி குவிந்த இளைஞர் பட்டாளம்... துள்ளியபடி வாடிவாசலை விட்டு ஓடி வந்த காளைகள் என பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள்‌ இன்று களைகட்டியிருந்தன. காலை 8 அளவில் ஜல்லிக்கட்டை ‌ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டிகளில் பங்கேற்க 700 காளைகள் தகுதி பெற்று வாடிவாசல் வழி விடப்பட்டன.

ஏழு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், சுற்றுக்கு 100 பேர் என 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். துள்ளி வந்த காளைகள், திமிலை பிடித்தவர்களை உதறித்தள்ளியும், சுழற்றியடித்தும் ஆட்டம் காட்டின. திமிலைப்பிடித்து அடக்கிய வீரர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினர். 7 காளைகளை அடக்கிய‌ சிவராஜ் முதல் பரிசையும், 5 காளைகளை அடக்கிய முருகன் இரண்டாம் பரிசையும் வென்றனர். பிடிக்கு அடங்காமல் போக்குக் காட்டிய காளைகளில் 7 காளைகள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டன. போட்டிகளையொட்டி சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனிடையே பாலமேடு ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்தவர்களில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்ப்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரை காளை குத்தியதில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது ஜல்லிக்கட்டின் சோக நிகழ்வாக அமைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com