குடிசை எரிந்த விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

குடிசை எரிந்த விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு
குடிசை எரிந்த விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

நெல்லை ‌மாவட்டம் ராதாபுரம் அருகே மின்கசிவு காரணமாக குடிசை எரிந்ததில் காற்றாலை காவலாளி தீயில் கருகி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள  கடம்பன்குளத்தை சேர்ந்த முதியவர் ராஜ் . சுப்பிரமணியபேரி கிராமத்தில் உள்ள தனியார்  காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தங்குவதற்கு என்று காற்றாலை அருகில் குடிசை ஒன்றும் அமைத்திருந்தார். நேற்று இரவு வழக்கம் போல் அந்த குடிசையில் ராஜ் படுத்து தூங்கி இருக்கிறார். இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக குடிசையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதியவர் தூக்கத்தில் இருந்ததால் வெளியே செல்ல முடியாமல் குடிசைக்குள் சிக்கி கொண்டார். இதனால் குடிசையில் பற்றிய தீ, ராஜ் உடலிலும் பற்றிக் கொண்டது. இதில் உடல் கருகிய ராஜ், குடிசைக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வள்ளியூர் தீயணைப்பு  வீரர்கள், ராதாபுரம் போலீசார் ராஜ் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com