\
சென்னை பேருந்துகளில் ஒருநாள் பயண அட்டை கட்டணம் உயர்வு

சென்னை பேருந்துகளில் ஒருநாள் பயண அட்டை கட்டணம் உயர்வு

சென்னை பேருந்துகளில் ஒருநாள் பயண அட்டை கட்டணம் உயர்வு
Published on

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் ஒரு நாள் பயண அட்டை கட்டணம் 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு வரும் 8-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது . தமிழக அரசு கடந்த 20ம் தேதி பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்த பிறகு, ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. பொதுமக்களும் பேருந்து கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு நாள் பயண அட்டை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com