ஒரே பைக்... மூன்று விலை... இது நாதக காளியம்மாள் கணக்கு..!

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதே பைக்கின் விலை 20000 ரூபாய்.
காளியம்மாள்
காளியம்மாள்காளியம்மாள்

தமிழ்நாட்டில் தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டு வெயிலையும் பொருட்படுத்தாது, உக்கிரமாக பிரசாரங்களில் ஈடுபட்டுவருகிறார்கள் வேட்பாளர்கள். இன்னும் இரண்டு நாள்களில் இந்த பிரசாரங்கள் எல்லாம் ஓய இருக்கிறது. Know Your Candidate என்னும் அடிப்படையில் சிலரின் வேட்புமனுக்களை ஆராய்ந்ததில் சில சுவாரஸ்யமான விஷயங்களும் அகப்பட்டன.

நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் காளியம்மாள். வேட்பாளர் மட்டுமல்ல பேச்சாளரும் தான். அதிரடியான பேச்சுகளுக்கு சொந்தக்காரரான இவர் கடந்த மூன்று தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல். இந்த மூன்று தேர்தல்களுக்காகவும் அவர் தன் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். வாகனம் என்கிற பகுதியில் ஒரே வண்டிக்கு மூன்று வெவ்வேறு விலைப்பட்டியலுடன் தாக்கல் செய்திருக்கிறார் காளியம்மாள்.

காளியம்மாளின் கணவரிடம் இருப்பது Bajaj Pulzer PY 02 J4591 என்கிற வாகனம். அந்த வாகனத்திந் விலை இந்த முறை தாக்கல் செய்த வேட்புமனுவில் 60300 ரூபாய் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

காளியம்மாள்
காளியம்மாள்காளியம்மாள்

2019ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் இதே வண்டியில் விலை 30000 என பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

காளியம்மாள்
காளியம்மாள்

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதே பைக்கின் விலை 20000 ரூபாய்.

காளியம்மாள்
காளியம்மாள்

அதே போல், 2021ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 2015ல் இருந்து வருமான வரி தாக்கல் செய்த தொகையை பதிவிட்டிருக்கிறார். அதே சமயம், 2019ல் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com