நடிகை கௌதமியின் சொத்துக்களை அபகரித்த விவகாரம் - முக்கிய நபர் கைது

நடிகை கௌதமியின் சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, தனது சொத்துகளை காரைக்குடியை சேர்ந்த பைனான்சியர் அழகப்பன் மோசடி செய்ததாக அளித்த புகார் குறித்து சென்னை மத்திய பெருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கௌதமி
கௌதமிபுதிய தலைமுறை

அதன்படி, அழகப்பனின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வரும் சூழலில், தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது மனைவி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கில் சம்மந்தப்பட்டவர்களில் முக்கிய நபரான பலராமன் என்பவரை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com