கோவைச் சிறுமி கொலையில் ஒருவர் கைது!

கோவைச் சிறுமி கொலையில் ஒருவர் கைது!

கோவைச் சிறுமி கொலையில் ஒருவர் கைது!
Published on

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியைக் காணவில்லை என்று கடந்த 25-ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் வீட்டின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டிருப்பதும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, குற்றவாளிகளை ‌பற்றிய விவரம் தெரிந்தவர்கள், தங்களிடம் தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த கொலையில் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com