\
ஆண்டிபட்டி: மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

ஆண்டிபட்டி: மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

ஆண்டிபட்டி: மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
Published on: 

ஆண்டிபட்டி அருகே மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கருத்தமலைப்பட்டியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது வீட்டு மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டின் கைபிடிச்சுவர் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. சிமெண்ட் பூச்சு மேற்கொள்ளப்படாமல் இருந்ததால் தற்போது பெய்த மழையில் நனைந்து பலமில்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று தியாகராஜனின் ஒன்றரை வயது மகன் யோகேஸ்வரன் வீட்டின் மொட்டை மாடியில் குடும்பத்தினருடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி படிக்கட்டின் மீது விழுந்துள்ளான். ஆனால் பக்கவாட்டு கைபிடிச் சுவர்மீது பலமில்லாததால் அதுவும் இடிந்து யோகேஷ்வரன் கீழே விழுந்துள்ளான்.
இதில் படுகாயமடைந்த குழந்தையை பெற்றோர் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து க.விலக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com