\
மீனவர்கள்
மீனவர்கள்முகநூல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்: தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 12 பேருக்கு, அந்நாட்டு பணத்தின் மதிப்பில் தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Published on

கடந்த மாதம் ஐந்தாம் தேதி, 3 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற 22 மீனவர்கள், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு, இலங்கை நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 12 பேருக்கு இலங்கையின் பண மதிப்பில் தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மீனவர்கள்
”என் கிட்ட வந்தா அடுத்த நிமிடமே ஆக்‌ஷன் எடுப்பேன்; பெண்கள் பாதுகாப்பு முக்கியம்” - நடிகர் சரத்குமார்

அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்களில் மீதமுள்ள 10 பேரை, வரும் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com