\
மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஓவியா!

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஓவியா!

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஓவியா!
Published on

மன அழுத்தத்தில் இருந்ததால் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா. அவரை நட்சத்திர விடுதியில் தங்க வைத்து மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஓவியா தற்போது மன அளவில் ஆரோக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான் எனவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நடிகை ஓவியா தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் வெளியேற்றப்படுபவர்கள் லிஸ்டில் ஜூலி, வையாபுரி, ஓவியா ஆகியோர் இருப்பதாலும், அவர்களில் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது கமல் முன்னிலையில் இன்று ஷூட் செய்யப்பட இருக்கிறது. ''சில தினங்களாக ஓவியாவைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருவதால் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை பற்றி கமல் பேச இருக்கிறார்.

ஓவியாவின் உடல்நலம் பற்றியும் அவர் தெளிவுபடுத்த இருக்கிறார். அப்போது ஓவியா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அவர் வெளியேற்றப்படுகிறாரோ, அல்லது அவராகவே வெளியேறுகிறாரோ... ஆனால், இன்று நடைபெறும் ஷூட்டில் பங்கேற்பது அவசியம் என்பதால் நிகழ்ச்சி நிர்வாகிகள் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஓவியாவும் சம்மதிக்க தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு இருக்கிறார். உடல் நலத்தை கருத்தில்கொண்டு ஓவியா வெளியேற விரும்பினால், அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்கள் அந்த நிகழ்ச்சியின் நிர்வாகிகள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com