”எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக அமையட்டும்” - முதல்வர் ஸ்டாலின்!

புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
புத்தாண்டு வாழ்த்து
புத்தாண்டு வாழ்த்து முகநூல்

புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்துவைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் இந்த புத்தாண்டு பிறப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்பட்டாலும், அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், இந்த புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களை தொடும்.

புதிய இலக்குகளை அடைவதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற தங்கள் லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்.” என்ற வாழ்த்து தெரிவித்த அவர்,

இதற்கிடையே, 2023 ஆம் ஆண்டின் நினைவலைகள் தொடர்பான காணொளி ஒன்றை, எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

அதில், ”இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய 2023ஆம் ஆண்டை வழியனுப்பி, சாதனைகளைத் தொடர்ந்து படைக்க 2024ஆம் ஆண்டை வரவேற்கிறது. “ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com