புதுச்சேரியில் நள்ளிரவு 1மணி வரை மது விற்கலாம்
புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் சிறப்பு அனுமதி கேட்பவர்கள் நள்ளிரவு ஒரு மணி வரை மது விற்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2019 ஆம் வருடம் பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. புது வருடத்தை வரவேற்கும் விதமாக மக்கள் நள்ளிரவில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். புதுச்சேரி மாநிலத்திலும் ஆண்டுதோறு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும். புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் புதுச்சேரி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் ஒன்று கூடி கொண்டாடுவார்கள். அதேபோல், நட்சத்திர விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறைவில்லாமல் இருக்கும்.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் சிறப்பு அனுமதி கேட்பவர்கள் நள்ளிரவு ஒரு மணி வரை மது விற்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சிறப்பு அனுமதி கோரும்பட்சத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை மது விற்க அனுமதிக்கப்படும் என புதுச்சேரி கலால்துறை தெரிவித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற ரூ10 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அத்துறை தெரிவித்துள்ளது.