படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் புதிய மசோதாவை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.
அதன்படி, ஆம்னி பேருந்துகளில் ஒரு படுக்கை வசதிக்கு மூன்று மாதத்திற்கு ரூ.4,000 வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளில் ஒரு இருக்கை வசதிக்கு மூன்று மாதத்திற்கு ரூ.3,000 வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வரி விதிப்பு இல்லாத நிலையில் தற்போது படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.