“ஓமந்தூரார் மருத்துவமனை இடத்தில் மீண்டும் சட்டப்பேரவை” - எம்.எல்.ஏக்கள் வைத்த கோரிக்கை

“ஓமந்தூரார் மருத்துவமனை இடத்தில் மீண்டும் சட்டப்பேரவை” - எம்.எல்.ஏக்கள் வைத்த கோரிக்கை

“ஓமந்தூரார் மருத்துவமனை இடத்தில் மீண்டும் சட்டப்பேரவை” - எம்.எல்.ஏக்கள் வைத்த கோரிக்கை
Published on

ஒமந்தூரார் அரசு மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றி மீண்டும் அங்கு சட்டமன்றத்தை நடத்த வேண்டும் என பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பேரவையில் வலியுறுத்தினார்

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மயிலாடுதுறை ராஜகுமார் பேசுகையில், ''கொரோனா காரணமாக சட்டப்பேரவை  கலைவாணர் அரங்கில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பார்த்து பார்த்து கட்டிய சட்டமன்றம் இன்று  மருத்துவமனையாக உள்ளது. அத்தகைய ஒமந்தூரார் அரசு மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றி மீண்டும் சட்டமன்றத்தை அங்கு நடத்த வேண்டும்'' என்றார்.

அதேபோல, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் பேசுகையில், "மருத்துவமனையை தென் சென்னைக்குமாற்றி, மீண்டும் சட்டமன்றத்தை ஒமந்தூரார் தோட்டத்தில் நடத்த வேண்டும்", என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com