35 வயது அண்ணன் மகனுக்கு 12 வயது மகளை கட்டாய திருமணம் செய்துவைத்த தாய் கைது..

35 வயது அண்ணன் மகனுக்கு 12 வயது மகளை கட்டாய திருமணம் செய்துவைத்த தாய் கைது..
35 வயது அண்ணன் மகனுக்கு 12 வயது மகளை கட்டாய திருமணம் செய்துவைத்த தாய் கைது..

ஓமலூர் அருகே 12 வயது சிறுமியைக் கட்டாயத் திருமணம் செய்த நபரையும், சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரத்தினம். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் ரத்தினம், தனது அண்ணன் மகனான செந்தில்குமாருக்கு(35), மகளைக் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்திற்கு செந்தில்குமாரின் தம்பிகள் பாபு, திருமுருகன், மதி ஆகியோரும், அவர்களது மனைவிகளான கமலா, மணிமேகலை, மஞ்சு ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமியின் தந்தை பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை மீட்டு தந்தை பால்ராஜிடம் ஒப்படைத்தனர். மேலும், திருமணம் செய்த செந்தில்குமார், சிறுமியின் தாய் ரத்தினம், மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் போலீசார் செய்து தேடிவந்தனர்.

7 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான செந்தில்குமார் மற்றும் சிறுமியின் தாய் ரத்தினத்தை வேறொரு வழக்கு விசாரணையின் போது அதிரடியாக போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com