யாருமே உதவ முன்வராததால் பறிபோன உயிர்..! கேள்விக்குறியாகும் மனிதநேயம்..!

யாருமே உதவ முன்வராததால் பறிபோன உயிர்..! கேள்விக்குறியாகும் மனிதநேயம்..!
யாருமே உதவ முன்வராததால் பறிபோன உயிர்..! கேள்விக்குறியாகும் மனிதநேயம்..!

உடல்நிலை பாதிக்கப்பட்டவருக்கு ஆம்புலன்ஸ் போன்ற உதவிகளை கூட செய்து உதவாமல் அதை சமூகவலைதளங்களில் பதிவிடுவதில் ஆர்வம் காட்டிய மனிதநேயம் கவலைக்குரியதாக உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ஒழிந்தியாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா. இவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள சுத்துக்கேணியில் தனியாருக்கு சொந்தமான ஒருசெங்கல்சூளையில் தங்கி பணியாற்றி வருகிறார்.  இவரது தங்கை பவுனு (60),  அவரது கணவர் சுப்ரமணி(65) இருவரும் ஒழிந்தியாப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு  தனது சகோதரியான மல்லிகாவை சந்திப்பதற்காக பவுனு தனது கணவருடன்சுத்துக்கேணி சென்றுள்ளார்.


பின்னர், சுப்பிரமணிக்கு உடல்நிலை சரியில்லாததால் அங்கேயே தங்கினர். சுப்பிரமணி மருத்துவமனை செல்லாததால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவமனை கொண்டு செல்ல வாகன வசதி இல்லாததாலும் ஆம்புலன்ஸை அழைக்க தொலைபேசி இல்லாததாலும் செய்வதறியாமல் பதட்டத்தில், செங்கல் அடுக்கி வைக்கும் தள்ளுவண்டியில்  தங்கையின் கணவர்
 சுப்ரமணியை படுக்க வைத்து, மல்லிகா  சுத்துகேணியிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.


வரும் வழியில் அவருக்கு  உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுப்ரமணியை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவரது உடலை சொந்த ஊரான ஒழிந்தியாப்பட்டுக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் உதவியை மல்லிகா நாடினார். இது குறித்து காட்டேரி குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மல்லிகாவிற்கு உதவி செய்து ஆம்புலன்ஸ் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்தனர். படிப்பறிவறில்லாத உரிய ஆலோசனைக்கூட கேட்க முடியாதவர்களுக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவ வேண்டும். அதை விடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கூட தகவல் சொல்லாமல் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்வதை நோக்கமாக கொண்டவர்களின் மனித நேயத்தை எண்ணி சமூக ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com