\
மதுரை: குழந்தையை பார்க்க வர மறுத்த மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை?

மதுரை: குழந்தையை பார்க்க வர மறுத்த மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை?

மதுரை: குழந்தையை பார்க்க வர மறுத்த மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை?
Published on

மதுரை அருகே மூதாட்டி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சிலைமான் எல்கேடி நகர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி செல்லம்மாள். இவர் சொந்தபந்தம் யாரும் இல்லாத நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால் இவரது வீட்டின் அருகே தூரத்து உறவினரான அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டைட்டஸ் என்பவர் குடியிருந்து வருகிறார். அண்மையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. அக்குழந்தையை பார்ப்பதற்காக மூதாட்டி செல்லமாளை டைட்டஸ் அழைத்துள்ளார். அதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த டைட்டஸ் குடிபோதையில் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சிலைமான் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்ய வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் டைட்டஸிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com