தருமபுரி: தங்களை ஏற்றிய ஏணியை எட்டி உதைத்த மகன்கள்... ஆதரவின்றி நிழற்கூடத்தில் அவதியுறும் தாய்!

பென்னாகரம் அருகே மகன்கள் கைவிட்டதால், நிழற்கூடத்தில் குடியிருக்கும் மூதாட்டி, கை, கால்கள் செயல்படாததால் உணவில்லாமல் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Old women
Old womenpt desk

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் நாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்கூடம், பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிழற்கூடத்தை தனது வாழ்விடமாக கொண்டு, ஒரு மூதாட்டி, கை கால் வராமல், உணவுக்கும் வழியின்றி நடக்க முடியாமல், உடுத்தி இருக்கும் ஆடையை கூட மாற்ற இயலாமல், கடந்த 4 ஆண்களாக அவதிப்பட்டு வருகிறார்.

bus stop
bus stoppt desk

திருவண்ணாமலையை சேர்ந்த இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்துள்ளார். அதனால் அவரைப் பிரிந்து கஷ்டப்பட்டு தன் இரு மகன்களையும் வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்து வைத்துள்ளார். இவர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் வரை தங்களுடன் வைத்திருந்த மகன்கள், பின்பு அவரை துரத்தி விட்டுள்ளனர்.

Old women
மேட்டுப்பாளையம்: மண் சரிவால் தடைபட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்...

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளா மற்றும் பெங்களூரில் உள்ள தனது மகன்களை பார்க்கச் சென்றுள்ளார் மூதாட்டி. ஆனால் அவர்கள் இருவரும் சேர்த்துக் கொள்ளாமல் திருப்பி ஊருக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து யாரோ ஒருவரின் உதவியுடன் பென்னாகரம் அருகே உள்ள நாகனூருக்கு வந்து, நிழற்கூடத்தில் தஞ்சமடைந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நோய் வாய்ப்பட்ட மூதாட்டி, தனது வலது கை, வலது கால் வராமல் இருந்துள்ளார்.

Old women
Old womenpt desk

தற்போது சாலையோர நிழற்கூடத்தில் வசிக்கும் மூதாட்டி, உண்ண, உறங்க மற்றும் இயற்கை உபாதைகனை கழிக்க என அனைத்தையும் அதே நிழற்கூடத்தில் செய்து வருகிறார். அதேபோல் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொது மக்கள் தரும் மிச்ச மீதி உணவுகளை உண்டு, அரை வயிறும், கால்வயிறுமாக வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். ஆதரவற்று நிழற்கூட்டத்தில் பரிதவித்து வரும் மூதாட்டிக்கு உரிய சிகிச்சை வழங்கி அவரை நன்றாக பார்த்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com