யூடியூபர் இர்ஃபானின் கார் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு! சென்னை அருகே விபத்து

பிரபல யூடியூபர் இர்ஃபான் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யூடியூபர் இர்பான்
யூடியூபர் இர்பான்twitter page

சமூக வலைதளங்களில், பல உணவுகளை ரிவ்யூ செய்யும் யூடியூப் சேனல்கள் இருந்தாலும், சில யூடியூப் சேனல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அந்த வகையில், யூடியூபில், ’இர்ஃபான் வியூஸ்’ என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த முகமது இர்ஃபான் என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகப் பிரபலமான யூடியூப் சேனலாக, இந்த சேனல் இருந்து வருகிறது. உணவு குறித்த வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகிறது. இவர் யூடியூபில் வைத்திருக்கும் சேனலுக்கு 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் இருந்து வருகின்றனர். சமீபத்தில் இர்ஃபானுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முகமது இர்ஃபானுக்கு சொந்தமான பென்ஸ் கார் தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே நடந்து சென்ற மூதாட்டி ஒருவர் மீது அந்தக் கார் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பத்மாவதி உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், இர்ஃபானின் பென்ஸ் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்த பத்மாவதி காட்டாங்குளத்தூர் முல்லை நகர்ப் பகுதியில் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி என தெரியவந்தது. இவர் சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. வாகனத்தை இர்பானின் ஓட்டுனர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாகவும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சம்பத்தின் போது இர்ஃபான் காரில் இருந்தாரா? இல்லையா? என்பது குறித்து போலீசார் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com